சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டி, விபச்சாரம் செய்வதாக இயக்குநர் வாராகி கூறிய நிலையில், என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் என்று வாராகிக்கு, ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றியதாக தெலுங்கு பட உலகினர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமா மீது புகார் கூறி வருகிறார்.
சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார்.
ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே இயக்குநர் வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் அளித்தார்.
நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது,
நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண் நான்.
எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.