Loading...
வத்தளை – கெரவலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் நிறுவனம் ஒன்றின் ஆய்வு கூடம் சேதமடைந்துள்ளது.
கெரவலபிட்டிய பகுதியிலுள்ள அதிவேக வீதி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் நிறுவனமொன்றில், இன்று முற்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Loading...
குறித்த ஆய்வு கூடத்தில் உள்ள ஐந்து எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...