Loading...
கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இய்யக்கச்சி வளைவுக்கு அருகில் சிற்றூந்து ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் பலியானார்.குறித்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நோக்கிப் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று, எதிர்த்திசையில் வந்த உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
விபத்தில் காயமடைந்த தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் சிற்றூர்ந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...