கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என்று பொது மக்களும் பொது அமைப்புக்ளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. உள்ளூர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்ட விரோதமாக மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பளை பிரதேசத்தின் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்கச்சி, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
பளை பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறு பிரதேசங்கள் கடற்கரைக்கு அருகில் இருப்பதனால் கடல் நீர் உட்புகும் அபாயம் இருப்பதாகவும், பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.