சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் பணி நிமித்தம் குடியேறும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது ஒட்டுமொத்த சுவிஸ் மக்கள் தொகையில் நான்கில் ஒருபகுதிக்கும் குறைவு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தை ஒப்பிடுகையில் இது சுமார் 2.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மொத்தமுள்ள வெளிநாட்டு குடிமக்களின், நிரந்தரமான மற்றும் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையானது ஜூலை 26 ஆம் திகதி முடிய கணக்குகளின் அடிப்படையில் 2,068,455 என உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் தான் வெளிநாட்டு குடிமக்கள் அதிகமானோர் குடியிருக்கின்றனர். இங்கு 407,453 பேர் குடியிருப்பதாக தெரியவந்துள்ளது.
சூரிச் மட்டுமின்றி வாட், ஜெனீவா மற்றும் பெர்ன் மாகாணங்களிலும் வெளிநாட்டினர் அதிகமாக குடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி சுவிட்சர்லாந்திலேயே மக்கள் தொகை மிகவும் குறைவான மாகாணமான ஜேர்மன் மொழி பேசும் Appenzell Innerrhoden மாகாணத்தில் 1,831 வெளிநாட்டினர் குடியிருக்கின்றனர்.
மேலும் ஜூன் மாத இறுதியில் வெளியான எண்ணிக்கையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் 54,445 அகதிகள் குடியிருந்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.