நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் 50 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களில், 30பேர் தமிழ் மொழியில் வாக்குமூலம் வழங்கியுள்ளமையினால், அவர்களது வாக்குமூலங்கள் மொழிபெயர்ப்பிற்காக அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், வாக்குமூலம் பெறப்பட்டவர்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.