எனது இப் பதிவுகளால், பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள் என்மீது எரிந்துவிழலாம். என்ன செய்வது? அதிகாரத்திலிருக்கும் நீங்கள் செய்யவேண்டியவற்றை நீங்கள் செய்தால் நாம் ஏன் தவறுகளை பட்டியலிட்டு தரவேற்றுகிறோம்?????
அதிகாரத்திலுள்ள உங்களால் விடப்படும் தவறுகளை சுட்டிக்காட்டுவதால் நாம் தனிப்பட பயனடையப்போவதில்லை. எம் இனம்மீது கொண்ட சிறு பற்றால் ஒரு சாதாரண முகநூல் போராளியாக இதை தவறேற்றுகின்றேன். தவறுகள் இல்லை இருப்பினும் உங்களது அதிகார சிந்தனைனில் தவறாக பட்டால் அடியேனை மன்னிப்பதுடனல்லாமல் இத்தகு செயற்பாடுகள் இனியும் இடம்பெறாமல் இருக்க ஏதாவது ஒரு பொறிமுறையை கையாளுங்கள்.
இன்று கொக்கட்டிச்சோலை வாராந்த சந்யைக்கு நான் செல்லும்போது எனது கைத்தொலைபேசியில் பதிவான படங்களே இவை.
பட்டிப்பளை பிரதேசசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை வாராந்த பொதுச்சந்தையின் வாகன தரிப்பிடத்தில் டிக்கட் கொடுத்து பணம் வசூலிக்கும் வேலையை 10 அல்லது 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் செய்கிறான். யாருடைய தவறு இது… பாவம் அச்சிறுவனின் குடும்பம் எத்தகு வறுமையானதோ…(தனிப்பட சிறுவனின் குடும்ப சூழ்நிலை அறிவேன்)
இத்தகு சிறுவர்களை கொண்டு வேலைக்காக அமர்த்துவதற்கு இவர்களுக்கு யார் கொடுத்தார் அதிகாரம்???
எனது மதிப்புக்குரிய பட்டிப்பளை பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை செயலாளர் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களே!!!! குழந்தைகளை கொண்டு வாகன தரிப்பிடத்தை நடாத்துவதை தவிர்த்து, இத்தகு வாகன தரிப்பிட வசதியை நேர்த்தியாக திறம்பட ஒழுங்கமைத்து
நிரந்தரமாக ஒரு வரை நியமித்தால் எமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு தொழில் கிடைப்பதுடன் இதில் வரும் வருமானத்தினை கொண்டு பிரதேச சபைக்கான #திரிப்பக்கட் வாங்குவதுடன் இருள் நிறைந்த வீதிகளுக்கு மின்குழில் பொருத்தி வீதிகளுக்கு கிறவலிட்டு செப்பனிடமுடியும் அல்லவா??????
ஏன் மக்கள் சேவை மறந்து மந்தமாக செயற்படுகிறீர்கள்?????
தந்த டிக்கட்டும் பிழை, இரண்டு துவிச்சக்கர வண்டிக்கு எண்ட பது DIO Bike சமன்போல….. மோட்டார் சைக்கிளுக்கு 2 சைக்கிள்ட டிக்கட்ட தந்திருக்காங்கள்.