Loading...
கைத்தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்களின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும் முறைமை அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை இடம்பெறும் மண்டபத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் கைத்தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்களின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும் முறைமை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காலத்தில் நடைமுறைப்படுத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
Loading...
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் இதனைத் தெரிவித்தார்.
இதற்காக இராணுவ சமிக்ஞை படைப் பிரிவினதும், தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பை பெற எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...