தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட மறைமுக கரும்புலிகளின் முகமூடி அங்கி ஒன்று இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரட்டைவாய்க்கால் பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் உள்ளதாக பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
கேள்விக்குறியாக இருக்கும் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அந்தப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களினாலே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் மறைமுக கரும்புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இராணுவத் தளங்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மறைமுக கரும்புலிகள் இலக்கை எட்டும் வரை தமது ஆள் அடையாளத்தை சக போராளிகளுக்கு காண்பிப்பதை மறுத்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
2009ம் ஆண்டிற்கு முன்னர் மறைமுக கரும்புலிகள் பயிற்சியின் போது குறித்த முகமூடியை அணிந்து (யாருடனும் வாய் பேசாமல் பயிற்சி) பெற்றுள்ளதாக விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இறுதி யுத்தம் நடைபெற்று 9 வருடங்களின் பின்னர் இந்த முகமூடி கண்டுபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.