நெல்லியடி யாக்கருப் பகுதியில் வீதியால் உரையாடியவாறு சென்ற பெண்ணின் கைப்பேசி அபகரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், முள்ளிக்காட்டுப் பகுதியில் கைப்பேசி புதைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீட்டுள்ளார்கள்.
யாக்கருப் பகுதியில் வீதியில் கைப்பேசியில் உரையாடியவாறு பெண் சென்றுள்ளார். உந்துருளியில் வந்த இருவர், கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். நெல்லியடிப் பொலிஸ் நிலையத் தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்தார் கள். துன்னாலையைச் சேர்ந்தவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முள்ளிக்காட்டுப் பகுதியில் கைப்பேசி புதைத்து வைக்கப்பட்டுள்ளதை தெரியப்படுத்தியுள்ளார். பொலிஸார் அங்கிருந்து கைப்பேசியை மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரையும் கைது செய்தனர்