Loading...
இரகசியமாக வைத்திருக்க வேண்டிய இராணுவத் தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுபவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் தகவல்கள் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ளச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.
Loading...
இராணுவம் தொடர்பான தகவல்கள் கசிவதன் மூலம் இராணுவத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படும்’ என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத் தளபதி இந்த அறிக்கையை கடந்த வாரம் இராணுவக் கட்டளை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரியவருவதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...