அடுத்த மாதம் நடைபெறவுள்ள கபொத உயர்தர பரீட்சையின் போது கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இவற்றின் சமிக்ஞைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
இதற்பாக தெரிவு செய்யப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இத்தகைய தற்காலிக சமிக்ஞை தடை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்பத்தை இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவு கொண்டிருக்கிறது.
எனவே கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் கருவிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக மட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் சமிக்ஞை பிரிவினால் ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
இதனை முறையாக அமுல்படுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு மற்றும் கையடக்க சேவை வழங்குநர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.