Loading...
அடுத்த வருட இறுதிக்குள், நன்னீர் மீன்பிடித்துறையில் பெறப்படும் உற்பத்திகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்துள்ளார்.
நன்னீர் மீன்பிடித் தொழில் துறையை விரிவுபடுத்த அரசாங்கம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் , மீன் வளர்ப்பிற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன்பிடித் தொழில்துறைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை விடுவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார் .
Loading...
அத்தோடு, மழை காலங்களில் நீர் நிரம்பும் குளங்களில் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...