நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினர்களுக்கும் அநீதியை மாத்திரமே விளைவித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று அம்பாந்தோட்டை, கினிகத்தென கூட்டுறவு மண்டபத்தில், நாமல் ராஜபக்ஷ தலைமையில் இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“மைத்திரி தலைமையிலான அரசாங்கம் தற்போது அரசியல் பழிவாங்கலை மாத்திரமே மேற்கொள்கின்றது.
இவர்களால் நாட்டில் வாழும் பல்வேறு தரப்பினருக்கும் எந்ததொரு நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக அநீதியான செயற்பாடுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இவர்கள், மதத் தலைவர்களை கூட அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தி வருகின்றனர்” என நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.