இன்று அலுவலக பணிகளில் ஈடுபடுபவர்களே அதிகமாகும். அவ்வாறானவர்கள் உடற்பயிற்சிகளே இன்றி வாழ்பவர்களாகும்.
எனினும் உட்கார்ந்த இடத்திலேயே நமது கை, கால்களை நீட்டுவது, மடக்குவது மற்றும் வளைப்பதும் உடற்பயிற்சிதான் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது சிறிய அசைவாக இருந்தாலும், அது உடற்பயிற்சிதான் என்கிறார்கள் அவர்கள்.
நாற்காலியில் அமர்ந்தவாறு நகருவதன் மூலம் நமது உடலில் உள்ள கலோரியைக் குறைக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனமிக் சிட்டிங் என்று அழைக்கப்படும் அமரும் முறை, அமர்ந்த இடத்திலிருந்து சிறிதளவும் நகராத சென்டரி சிட்டிங் உடன் வேறுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே இடத்தில் பல நேரங்கள் உட்கார்ந்து, எங்கேயும் நகராமல் இருப்பதே சென்டரி சிட்டிங் என கூறப்படுகின்றது.
அவர் இருந்தால் அது இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
எனவே உட்காரும்போது சிறிதளவாவது கைகளையும் கால்களையும் அசைப்பது அவசியம்! அசைத்தால் கலோரிகளை விரைவாக குறைத்து விட முடியும்.