Loading...
இந்தமுறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் போது இடம்பெறக்கூடிய முறைக்கேடுகளை தடுப்பதற்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கான பயிற்றப்பட்ட மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்தவும், ஜேமர் எனப்படும் கைப்பேசிகளுக்கான சமிக்ஞை முடக்கிகளை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
அதேநேரம் உயர்தர பரீட்சைகள் மற்றும் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைகளின் நிமித்தம், தொடர்புடைய மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்தமுறை கல்விப் பொதுத்தரதார உயர்தர பரீட்சைகள், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் திகதி வரையில் நாடெங்கிலும் 2 ஆயிரத்து 268 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளன.
Loading...