அனலைதீவு – புளியம்தீவு இணைப்பு வீதி நவீன முறையில் சீரமைக்கப்படுவதற்காக 83 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என்று ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
குறித்த வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாது காணப்பட்டது. இதனால் இப்பிரதேசங்களின் மக்கள் நீண்டகாலமாக தமது போக்குவரத்துகளின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும், குறித்த வீதியின் அபிவிருத்தியின் அவசியம் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
அதற்கமைவாக நல்லிணக்க அமைச்சின் ஊடாக 8 கோடி 30 இலட்சம் ரூபா நிதி குறித்த வீதியின் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.