Loading...
கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மஹவலே – திம்புல்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களில் 11 பாடசாலை மாணவர்களுக்கு உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...
இதேவேளை, அண்மைக்காலமாக வாகன சாரதிகளின் கவனயீனம் காரணமாக ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Loading...