Loading...
தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் ஈழத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 80 வயதுடைய (சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை) மூதாட்டி கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Loading...
தமிழகம் சென்னையில் உள்ள கும்புடிபூண்டி அகதிகள் முகாமில், மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வசித்து வந்த மூதாட்டியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் ஒருவர், அவரைக் கொலை செய்து விட்டு, அங்கிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Loading...