பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் ரசிங்கர்கள் மனதை கொள்ளையடித்தவர் நாட்டுப்புற கலைஞரான செந்தில் கணேஷ். சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற செந்திலுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது.
மேலும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பையும் பெற்றார். ரஹ்மான் வாய்ப்பு கொடுப்பதற்கு முன்பாகவே டி.இம்மான் சீமாராஜா படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்திருந்தார். அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா 37 படத்தில் பாடல் ஒன்றை பாட உள்ளார்.
இந்நிலையில் டி.இம்மான் மற்றொரு சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆம், செத்த ஜோக் ஸ்ரீகாந்திற்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார் டி.இம்மான். இதனை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.