தொழில்நுட்பங்கள் எந்த அளவினுக்கு நமது வாழ்க்கைக்கு பயன் புரிகின்றனவோ அதே அளவினுக்கு அவை ஆபத்தானவையும் கூட. ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு மட்டும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் நலமாக அமைந்திடும். இல்லாவிடில் நம்மால் நம்மையே மீட்டெடுக்க இயலாத அளவினுக்கு நம்மை பாதாளத்தில் கொண்டுசெலுத்திடக்கூடியவை தொழில்நுட்பங்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றான சமூக வலைத்தளம் இளைஞர் ஒருவருக்கு வினையாகிப்போனது குறித்து வெளிவந்துள்ள செய்தி பகீர் கிளப்பியுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள தினேஷ்பாபு என்பவர் தூத்துக்குடியை சேர்ந்த மந்திரமூர்த்தி என்பவருடன் முகநூல் மூலம் நட்பாக பழகி ஓரினசேர்க்கைக்காக அழைத்துள்ளார். அதன்படி, வடபழனியில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்த மந்திரமூர்த்தியை பிரபு மற்றும் அவரது நண்பர்கள் தாக்கி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.
காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெரிகிறது.