யாழ்ப்பாண மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு இந்த முறையும் அரை மானியத்தில் விதை உருளைக் கிழங்கை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்டச் செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் விவசாயிகளின் நன்மை கருதி கொழும்பு விவசாய அமைச்சினால் அரை மானிய விலையில் விதை உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. ஆயிரத்து 400 பேருக்கு கடந்த முறை விதை உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது.
விவசாயிகள் அதிக எண்ணிக்கையிலான விதை கிழங்கை கோரி இருந்தாலும் 4 அந்தர் வரையுமே வழங்க கூடியதாக இருந்தது.
ஒரு அந்தர் 14 ஆயிரம் ரூபா.அரை மானிய முறையில் 7 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்பட்டது. அரை மானியத்தில் கிழங்கைப் பெற்று செய்கையை மேற்கொள்ளுவதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர் .
நவம்பர் மாத காலப்பகுதியில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே விதை உருளைக் கிழங்கு உரிய காலத்தில் கிடைப்பதற்கு ஏதுவாக அசர தலைவர் செயலகம்,மற்றும் கொழும்பு விவசாய அமைச்சுக்கு கோரிக்கையை அனுப்பியுள்ளோம்.
38 மில்லியன் ரூபா மானியமாக வேண்டும் என்று தெரிவித்து இந்த கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.