கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத முறையில் நடந்துகொண்ட பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரவுக்களியாட்ட விடுதியொன்றில் பணிபுரியும் குறித்த பெண், அவர் பணியாற்றிய விடுதியில் ஏற்பட்ட மோதலொன்று தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி இரவு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது இவர் பொலிஸ் நிலையத்தில் மோசமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலைய கண்ணாடியையும் அவர் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நடன மங்கை குடி போதையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரவு விடுதியில் இந்த மங்கை, மற்றைய நடன மாதுக்களுடன் சேர்ந்து மது அருந்தி பின்பு மோதலில் ஈடுபட்ட போது அந்த விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்டு கீழே கிடந்த இந்த நடன மங்கை தொடர்பில் 119 அவசர சேவைக்கு அறிவிக்கப்படவே, கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழு ஒன்று சென்று அவளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது அவர் பொலிஸ் நிலையத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை தாக்கி காயப்படுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான நடன மங்கை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.