பிலிப்பைன்சின் இலிகன் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா காமிங்யூஸ். 14 வயது சிறுமி பிறக்கும் போதே மார்பகம் இருக்கும் பகுதிக்கு அருகே இரண்டு கைகள் வளர்ந்த நிலையில், வயிற்றுப்பகுதியில் ஒரு நீள்வட்ட வடிவில் உறுப்பு ஒன்று வளர்ந்த நிலையில் இருந்துள்ளது.
இதனால் கடும் அவதிப்பட்டு வந்துள்ள சிறுமி, தற்போது உள்ளூர் மக்களின் உதவியோடு தாய்லாந்திற்கு அறுவை சிகிச்சைக்காக செல்லவுள்ளார்.
இது குறித்து வெரோனிகா காமிங்யூஸ் தெரிவிக்கையில், நான் சிறு வயதில் இருக்கும் போது ஒரு சிறிய அளவு கால்போன்று தெரிந்தது. அதன் பின் நான் வளர வளர, அதுவும் வளர ஆரம்பித்தது. அது இரண்டும் மிகவும் எடை கொண்டதாக இருக்கும். இதனால் நான் கடும் அவதிக்குள்ளாவேன், வளர்ந்த நகங்களையும் வெட்டுவேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமியின் தயார் புளோரா காமிங்யூஸ் தெரிவிக்கையில், நான் கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்களை சரியாக சென்று பார்க்க முடியவில்லை, நான் இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என்று தான் நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக அது இரட்டை குழந்தை இல்லை. வெரோனிகா காமிங்யூஸ் தான் பிறந்தாள். அப்போது இரட்டை குழந்தை என நினைத்த அந்த குழந்தையின் வளர்ச்சி சரியில்லாத காரணத்தினால், அந்த குழந்தையின் உடல் பாகங்கள் அப்படியே வெரோனிகா காமிங்யூஸ் -யிடம் ஓட்டி வளர்ந்துள்ளது.
இதன் காரணமாக அவ்வப்போது அவள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளாள். சில நேரம் அதில் இரத்தம் எல்லாம் வரும். நாங்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் இதை சுலபமாக நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உள்ளூர் மக்கள் தங்களுக்கு உதவியுள்ளதால், தற்போது தன் மகள் அறுவை சிகிச்சைக்காக தாய்லாந்து செல்லவுள்ளதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இரட்டை குழந்தையாக பிறக்க வேண்டிய காரணத்தினால், வெரோனிகா காமிங்யூஸ் பிறந்துள்ளதால், அவளுடன் சேர்ந்து பிறக்க வேண்டிய தங்கை அவளை விட்டு பிரியமுடியாமல் அவளுடனே ஒட்டி வளர்ந்து வருகிறாள் என்று அப்பகுதி மக்கள் சிலர் கூறி வருகின்றனர்.