Loading...
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தொழிலுக்காக சென்று இதுவரை எவ்வித தகவல்களும் இல்லாத பெண்ணொருவரை கண்டுபிடிப்பதற்காக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மதுகம கந்தஹென பிரதேசத்தை சேர்ந்த பீ ரூபிகா சாந்தனி என்ற பெண்ணொருவர் தொடர்பிலேயே தகவல் கோரப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.
Loading...
எவ்வாறாயினும், அவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர் தொடர்பில் தகவல் தெரியும் நபர்கள் இருந்தால் , வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 011 2894136 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
Loading...