தமிழ் சினிமாவில் பலவருடங்களாக கனவுக்கன்னியாக இருந்த த்ரிஷா நாயகி படத்தையடுத்து மீண்டும் சோலோ ஹீரோயினாக பேயாக மாறி மிரட்ட முயற்சித்துள்ளார். மோகினி ரசிகர்களை கவர்ந்தாரா என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
தமிழ்நாட்டிலிருந்து லண்டனுக்கு யோகிபாபுவின் திருமணத்திற்கு உதவி செய்ய போகிறார். அங்கு அவர் பங்களாவில் தங்குகிறார்.
அப்போது தேம்ஸ் நதியில் படகு சவாரி செய்யும் திரிஷாவின் உடம்பில் மோகினி இறங்குகிறது. அதிலிருந்து தமிழ் சினிமாவின் வழக்கமான பேய் கதைக்களம் ஆரம்பமாகிறது.
படத்தை பற்றிய அலசல்
த்ரிஷா நாயகி படத்திற்கு பிறகு மீண்டும் பேய்க்கதைக்களத்தில் சோலோ ஹீரோயினாக இறங்கியுள்ளார். படம் முழுவதும் இவரைச் சுற்றித்தான் நகர்கிறது.
சமீபகாலமாக யோகிபாபுவின் காமெடி அதிகமாக ரசிக்கப்படுகிறது. இந்தப்படத்தில் இவரின் காமெடியால் படத்தை காப்பாற்ற முயன்றுள்ளார்.
பேய் வந்ததும் வழக்கமாக சாமியாரை கூட்டி வந்து விரட்ட முயற்சிக்கும் காட்சிகள், காமெடியன்கள் பேயிடம் அடிவாங்குவது என பல படங்களில் பார்த்த அதே காட்சியைத்தான் மீண்டும் படமாக்கியுள்ளனர்.
எப்போதும் தமிழ்நாட்டுக்குள்ளேயே நடக்கும் பேய்க்கதை இதில் லண்டனில் நடப்பதால் பார்ப்பதற்கு படத்தில் கொஞ்சம் புதுமையான அனுபவமாக இருக்கும்.
படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாகவே உள்ளது. பாடல்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. அடுத்தடுத்த காட்சிகள் என்ன என யூகிக்கும்படியான திரைக்கதை படத்துக்கு தொய்வாக அமைந்துள்ளது.
ப்ளாஷ்பேக் காட்சிகளும் படத்திற்கு தேவையான வலு சேர்க்கவில்லை. வைஷ்ணவி, மோகினி என இரு வேடங்களில் நடித்தும் எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தவில்லை
க்ளாப்ஸ்
த்ரிஷாவின் நடிப்பு. யோகிபாபுவின் காமெடி
கலர்புல்லான படத்தின் காட்சிகள், கேட்கும்படியான பாடல்கள்
பல்ப்ஸ்
பழைய கதை, திரைக்கதை
மற்ற கதாபாத்திரங்களுக்கும் இன்னும் வலுவான காட்சிகள் இருந்திருக்கலாம்.
யூகிக்கும்படியான காட்சிகள்
மொத்தத்தில் த்ரிஷாவையும், பேய்ப்படத்தையும் ரசிப்பவர்கள் மட்டும் போய் பார்த்துவரலாம்.