தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அணுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற 38 ஆவது போட்டியில் தமிழ் யுனைட்டட் அணியை எதிர்த்து மன்னார் FC அணி மோதியது.
இதில் தமிழ் யுனைட்டட் அணியும், மன்னார் FC அணியும் 02:02 என்ற கோல்களை பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
இந்த போட்டியில் தமிழ் யுனைட்டட் அணி சார்பாக ஜக்சன் 11 ஆவது நிமிடத்திலும் மற்றும் ஐசாக் 88 ஆவது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தனர்.
மன்னார் FC அணி சார்பாக டிலக்ஸன் 04 ஆவது நிமிடத்தில் முதல் கோலையும், இசைடீன் 45 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் பதிவு செய்தனர்.
யாழ்பாணத்தின் சிறந்த வீரர்களை கொண்டிருக்கும் தமிழ் யுனைடட் அணி மீதும் மன்னார் மாவட்டத்தின் தலைசிறந்த வீரர்களை கொண்டிருக்கும் மன்னர் FC அணி மீதும் கடும் எதிர்பார்ப்பு உள்ளதால் இந்த போட்டி பலரது கவனத்தை ஈத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்