கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர விடுதியில் ஏற்படுத்தி கொண்ட மோதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பெண் ஒருவர் குடிபோதையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் அவரை பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த பெண் பொலிஸ் நிலைய கண்ணாடிகளுக்கு தாக்குதல் மேற்கொண்டு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் இரவு நேர விடுதியிலும், தாக்குதல் மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் குடிபோதையில் இருந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் இரவு நேர விடுதியில் மேலும் சிலருடன் மதுபானம் அருந்தியுள்ள சந்தர்ப்பத்தில் அங்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். பின்னர் விடுதியின் பாதுகாப்பு அதிகாரி தாக்குதல் மேற்கொண்டு அவரை வெளியே துரத்தி அனுப்பியுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரியின் தாக்குதலில் கீழே விழுந்தவர் தொடர்பில் 119 என பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பிற்கமைய கொள்ளுப்பிட்டிய பொலிஸ் குழுவொன்று அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.