அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் எனக் கூறப்படும் பொலிஸ் என்று அழைக்கப்படும் அருண காந்த அத்தநாயக்க என்ற நபரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் நேற்றிரவு மினுவங்கொட, தெவலபொல பிரதேசத்தில் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, நேற்றிரவு 11.20 அளவில் பொலிஸ் என்ற ஹோவசமே அத்தநாயக்ககே அருணகாந்த அத்தநாயக்க என்ற நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தன்வசம் வைத்திருந்த, 7.85 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும்,2.5 கிராம் ஐஸ் என்ற போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை கைதுசெய்யப்பட்டுள்ள நபருக்கு அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கும் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.