வவுனியாவில் செயற்படும் மனித உரிமைகள் பவுண்டேசனுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தொடர்பு இல்லை வவுனியாவில் அண்மையகாலமாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மனித உரிமைகள் அமைப்பிற்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது இதனால் வரும் எவ்வித தடங்கல்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொறுப்பு இல்லை என்று வவுனியா அலுவலக பொறுப்பதிகாரி சட்டத்தரணி எல். ஆர் வசந்தராசா தெரிவித்துள்ளார்.
அண்மைய காலங்களில் திரிய மனித உரிமைக்குழு என்ற பெயரில் பல இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது.
வவுனியாவில் செயற்பட்டுவரும் திரிய மனித உரிமைகள் அமைப்பு அல்லது திரிய நிறுவனமே இந்நிறுவனத்திற்கும் எமது இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது அவர்களின் செயற்பாடுகள் வேறு எமது செயற்பாடுகள் வேறு அவர்கள் ஒரு அமைப்பு அல்லது அறக்கட்டளையாகவே செயற்பட்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் இவற்றை சரியாக புரிந்து கொண்டு செயற்படவேண்டும் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கும் எமது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது இதனால் வரும் இழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை பொதுமக்கள் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த திரிய மனித உரிமைகள் குழு என்ற பெயரில் பல கலந்தரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு பலரிடம் அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்வதற்கும் தொலைபேசி சிம் அட்டை போன்ற ஏனைய தேவைகளுக்கும் பணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக குறித்த குழுவின் வடபிராந்திய பொறுப்பானவர் என்று கூறப்படும் ஜோன் ரிச்சட் செபஸ்டியன் என்பவரை நேரில் சந்தித்து வினவியபோது
தாம் குறித்த குழுவினை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார் எனினும் எமது செய்தியாளர்கள் ஆணைக்குழுவில் பதிவில்லை என்று தெரிவிக்கவும் அதற்குறிய ஆவண பிரதியினை கேட்டும் செய்தியாளர்களிடம் ஆவணத்தை காண்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவர்களால் குழு அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் சகல ஆவணங்களிலும் வேறு வேறு முகவரிகள் இடப்பட்டுள்ளதுடன் அவைகளில் குறிக்கப்பட்டுள்ள சில தொலைபேசி இலக்கங்களும் தவறான இலக்கங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை குறித்த குழுவின் வடபிராந்திய பொறுப்பாளர் என்பவர் கணகராயன்குளம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முகவராக செயற்பட்டு இராணுவத்திற்கு காணிகள் பிடித்து கொடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது அது தொடர்பாக வினவியபோது அப்பகுதியில் 15இலட்சம் ரூபா பணம் வழங்கி தான் காணி பெறப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் இவர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் எதிலும் இவர்களுடைய பதிவிலக்கம் ஏதும் குறிக்கப்படவில்லை.