02.08.2018 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 17ம் திகதி, துல்ஹாதா 19ம் திகதி,
02.08.2018 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி காலை 8:46 வரை; அதன் பின் சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 11:12 வரை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்தயோகம்
* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.
மேஷம்:
உறவினர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான அனுகூலம் கிடைப்பதில் தாமதம் இருக்கும்.
ரிஷபம்:
முன்னர் செய்த உதவிக்கான நற்பலன் தேடி வரும். நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான அனுகூலம் உண்டாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
மிதுனம்:
கவலை நீங்கி மனத்தெளிவு பெறுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வீர்கள்.பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுபசெய்தி வீடு தேடி வரும்.
கடகம்:
செயலில் சில குளறுபடி ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரம் இதமான அணுகுமுறையால் வளர்ச்சி பெறும். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும். நண்பரால் உதவி கிடைக்கும்.
சிம்மம்:
நல்லோரின் ஆலோசனையால் நன்மை அடைவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும்.குடும்பச் செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனஅமைதியை தரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் உண்டு.
கன்னி:
மனதில் உதித்த திட்டம் செயல்வடிவம் பெறும். வெற்றியை நோக்கி பீடுநடை போடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்ததை விட,கூடுதல் பணவரவு கிடைக்கும்.வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.
துலாம்:
குடும்பத்தினர் அன்பு பாசத்துடன் உதவுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். உற்பத்தி விற்பனை செழித்து வருமானம் கூடும். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு இனிதாக நிறைவேறும்.
விருச்சிகம்:
எவரிடமும் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சாதகமான சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சுமாரான பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். பிள்ளைகளால் உதவி உண்டு.
தனுசு:
சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும்.சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் நல்லது.
மகரம்:
பிறருக்கு உதவுகின்ற எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அனுகூலம் உருவாகும். பணவரவில் நல்ல முன்னேற்றம் உண்டு.குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.இளமைக்கால இனிய நினைவு மகிழ்ச்சி தரும்.
கும்பம்:
சுற்றுப்புறச்சூழ்நிலை தொந்தரவு தரலாம். பணிகளில் திட்டமிட்டு ஈடுபடுவது நல்லது.தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும்.கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள்.வளர்ப்பு பிராணிகளிடம் விலகி இருக்கவும்.
மீனம்:
மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். பகைவரால் உருவான கெடுசெயல் பலமிழந்து போகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் .லாபம் திருப்திகரமாக இருக்கும். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.