Loading...
பிரதான செய்திகள்:மன்னார் சதொச விற்பனை கட்டுமான பணியின் போது வளாகத்தினுள் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று 45வது நாளாகவும் இடம் பெற்று வருகின்றது.
விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...
நேற்று மதியம் வரை 60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மேலும் 2 மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்பொது வரை 62 மனித எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. கண்டுப்படிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகற்றும் பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...