1990களில் ஒரு வீட்டில் ஏ.சி என்றால் அவர்கள் மிகவும் வசதியாக இருப்பவர்கள் என்று நாம் அறிந்துருப்போம். ஆனால் அந்த காலங்கள் கடந்து இப்போது நடுத்தர குடும்பங்களில் கூட ஒரு அத்தியாவசிய பொருளாக மாறி இருக்கிறது.
பெரும்பாலான ஆபிஸ் மற்றும் கடைகளிலும் தொடங்கி சூப்பர் மார்க்கெட், சலூன் போன்ற திரும்பிய எல்லா இடங்களிலும் ஏ. சி காணப்படுகிறது. இதனால் என்ன இருக்கு என்று பார்த்தால் உடல் நல கோளாறு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
ஏ. சி அறையில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் உடல் நல கோளாறு மட்டும் இல்லாமல் தோல் வியாதிகளும் ஏற்ப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
ஏ.சி யால் ஆபத்து வர காரணம்:
இவை ஏ. சியானது இயற்கை காற்றை தருவது கிடையாது. இவை காற்றுடன் கலந்து ஈரப்பதத்தை கொண்டு அதை குளிர் காற்றாக நமக்கு தருகிறது.
ஏற்படுத்தும் வியாதிகள்:
ஆஸ்துமா அலர்ஜி, சொறி, அரிப்பு, சலி, கண் எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கிறது.
பிற கோளாறு:
நீங்கள் ஏ. சியின் நேர் எதிராக அமர்ந்திருந்தால் மூக்கடைப்பு, காது அடைப்பு, தல வலி போன்றவைகளும் ஏற்படுத்துகிறது.
அதிக நேரம் ஏ. சியில் இருப்பதை தவிர்த்தால் இது போன்ற வியாதிகளில் தப்பிக்கலாம்.