திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் தொண்டர்கள் மத்தியில் நிம்மதியான நிலை ஏற்பட்டுள்ளதோடு, காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த தொண்டர்களின் கூட்டமும் கலைந்து அமைதியான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்து 3 ஆம் வகுப்பு சிறுமியின் கடிதம் தற்போது இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டை சேர்ந்தவர் மிக்கலே மிராக்ளின். இவர் கார்மெல் பப்ளிக் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கருணாநிதியின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில், எனக்கு கருணாநிதி தாத்தாவை மிகவும் பிடிக்கும். தாத்தா நீங்கள் உடல்நலம் குன்றியிருப்பதால் நான் அழுதேன். உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் என்பது போன்ற வரிகள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தின் புகைப்படம் இதோ…