சுவையான தமிழ் மிளகு சிக்கன் கறி செய்வதற்கான செய்முறையை அறிந்து கொள்வோம்..
தேவையான பொருட்கள்
800 கிராம் கோழி இறைச்சி
வெட்டிய 7 பூண்டு கிராம்பு
வெட்டிய ஒது துண்டு இஞ்சி
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
3 டீஸ்பூன் வெஜிடபிள் எண்ணெய்
10 கறிவேப்பிலை
வெட்டிய 220 கிராம் வெள்ளை வெங்காயம்
2 பச்சை மிளகாய் துண்டுகள்
வெட்டிய 180 கிராம் தக்காளி
250 மில்லி லீற்றர் தண்ணீர்
கொத்தமல்லி
மிளகு மசாலா தூள்
2 தேக்கரண்டி மிளகு
1 தேக்கரண்டி சீரகம் விதைகள்
2 மிளகாய் உலர்ந்த சிவப்பு மிளகாய்
1 இலவங்கப்பட்டை
1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள்
3 கிராம்பு
1 தேக்கரண்டி பாப்பி விதை
1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
செய் முறை
இஞ்சி மற்றும் பூண்டை நீர் ஊற்றி அறைத்த கொள்ள வேண்டும். பேஸ்ட் போன்று அதனை அறைத்து கொள்ள வேண்டும். பெரிய பாத்திரம் ஒன்றில் இஞ்சி, பூஞ்சி பேஸ்ட்டுடன் மஞ்சளை சேர்த்து கொள்ளவும். பின்னர் கோழி இறைச்சி துண்டுகளில் இந்த பேஸ்ட்டை தடவி சில மணி நேரங்களுக்கு அல்லது ஒரு இரவு முழுவதும் வைக்கவும்.
மிளகு மசாலா செய்வதற்காக அனைத்து பொருட்களையும் அறைத்து தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
பின்னர் பெரிய பாத்திரம் ஒன்றில் சாதாரண அளவு வெப்பத்தில் எண்ணை ஊற்றி சூடாக்கவும். அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை அதில் போடவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை 12 முதல் 15 நிமிடங்கள் எண்ணையில் வேக வைக்க வேண்டும்.
இப்போது பச்சை மிளகாயை சில நிமிடங்களுக்கு வேக வைக்கவும். அதில் தக்காளியை சேர்த்து 8 -10நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
இதில் உற வைத்த கோழியை 5 நிமிடங்கள் பெறிக்க வேண்டும். 5 நிமிடங்களின் பின்னர் செய்து வைத்த மிளகு மசாலாவை 2 – 3 நிமிடங்கள் கிளற வேண்டும்.
அதில் சிறிதளவு நீர் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் லேசான சூட்டில் 20 – 30 நிமிடங்கள் கிளறி வேக வைக்க வேண்டும்.
பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து சுவையான தமிழ் மிளகு சிக்கன் கறியை சோறுடன் பரிமாறலாம்.