இலங்கையர்கள் 4 பேருக்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய மலேசிய நாட்டவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெகதீஸ்குமார் கோலிப்பிள்ளை என்ற 42 வயதான மலேசிய நாட்டவருக்கே நேற்றைய தினம் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி Changi விமான நிலைய கழிப்பறையில் வைத்து இலங்கையர்களுக்கான, இத்தாலி விமான கடவுச்சீட்டை அவர் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் அவர் மலேசியாவுக்கு திரும்பியுள்ளதாக, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 முதல் 37 வயதிற்குட்பட்ட 4 இலங்கையர்களும் இத்தாலி அல்லது சுவிட்ஸர்லாந்தில் அகதி அந்தஸ்த்து எதிர்பார்த்துள்ள நிலையில், அவர்கள் அடையாளம் தெரியாத இலங்கை முகவரின் உதவியை நாடியுள்ளனர்.
ஐரோப்பிய நாட்டுக்கு செல்வதற்காக பத்து இலட்சம் முதல் 30 இலட்சம் ரூபா இலங்கை பணத்தில் சிங்கப்பூர் ஊடாக பயணிக்க முயற்சித்துள்ளனர்.
குறித்த மலேசிய கடவுச்சீட்டில் உள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இலங்கையர்களுக்கு தொடர்புடையதல்ல என தெரியவந்துள்ளது.
குறித்த 4 இலங்கையர்களும் மலேசிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 12ஆம் திகதி அவர்களுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிரிஷ்ணபிள்ளை நவராஜ், சுரேஷ் சுதர்ஷினி, கலைசந்திரன் வினோதன், கஜேந்திரன் கஜீபன் ஆகிய நான்கு இலங்கைத் தமிழர்களுமே ஐரோப்பா செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டனர்