சென்னையில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்த சினிமா நடிகர், கூட்டாளியுடன் கைது செய்யப் பட்டார்.
சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
அவற்றின் அடிப்படையில், தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை தேடி வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ஒரு வீட்டில் திருடப்பட்ட செல்போனை கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த செல்போன் மூலம், சேலையூர் – பவானி நகரைச் சேர்ந்த ரவி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். சினிமாவிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த ரவி, காதலிக்கும் பெண்ணை ஆடம்பரமாக திருமணம் செய்வதற்காக பூட்டிக்கிடக்கும் வீடுகளில் திருடியதாக கூறினார்.
அவனது கூட்டாளியான பம்மலைச் சேர்ந்த கிருஷ்ணபெருமாள் என்ற கண்ணனையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 43 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.