03.08.2018 வெள்ளிக்கிழமை இன்றைய ராசி பலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 18ம் திகதி, துல்ஹாதா 20ம் திகதி, 3.8.18 வெள்ளிக்கிழமை தேய்பிறை, சஷ்டி திதி காலை 8:41 வரை; அதன்பின் சப்தமி திதி ரேவதி நட்சத்திரம் காலை 11:47 வரை;
அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
பொது : ஆடிப்பெருக்கு விழா, புனித நதிகளில் வழிபாடு.
மேஷம்:
உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். மற்றவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும்.
பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு வெகுமதி பெறுவர்.
ரிஷபம்:
செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் விழிப்புடன் ஈடுபடவும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.
மிதுனம்:
முக்கியஸ்தரின் அன்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். வருமானம் அதிகரிக்கும்.
வீட்டை அழகுப்படுத்த கலையம்சம் உள்ள பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித் தரும்.
கடகம்:
அன்பு வழியில் பிறருக்கு நன்மை செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும்.
தாராள அளவில் பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.
சிம்மம்:
முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும்.
தவிர்க்க இயலாத திடீர் செலவும் ஏற்படும். சூழ்நிலை தொந்தரவால் நித்திரை கெடலாம். மாணவர்களுக்கு படிப்பில் தகுந்த கவனம் வேண்டும்.
கன்னி:
உங்களின் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும்.
சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். பிள்ளைகளின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.
துலாம்:
நண்பரிடம் கேட்ட உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.
உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.
விருச்சிகம்:
புதியவர்களின் அறிமுகம் மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபார நடைமுறையில் நவீன மாற்றம் செய்வீர்கள்.
உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு:
வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும்.
பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மகரம்:
சொந்த திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு சரிசெய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும்.
சீரான பணவரவு கிடைக்கும். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
மகரம்:
சொந்த திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு சரிசெய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும்.
சீரான பணவரவு கிடைக்கும். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
மீனம்:
எதிர்கால சூழலை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் வளர்ச்சி சீராகும்.
ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.