ஸ்காட்லாந்தில் 1200 கோடிக்கு மேல் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை இளைஞர் ஒருவர் இரண்டாக கிழித்து குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தின் Aberdeenshire பகுதியைச் சேர்ந்த Fred Higgins. 67 வயதான இவர் கடந்த 10-ஆம் திகதி தான் வாங்கிய யூரோ மில்லியன்ஸ் லாட்டரி டிக்கெட்டின் எண்ணை சரிபார்ப்பதற்காக அங்கிருக்கும் லாட்டரி விற்பனை செய்யப்படும் Scotmid store-க்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த இளைஞர் மெஷின் உதவியின் மூலம் லாட்டரி எண்ணை பார்த்த போது, இவரின் எண்ணிற்கு லாட்டரி டிக்கெட் விழவில்லை என்று கூறி, டிக்கெட்டை இரண்டாக கிழித்து அங்கிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.
அதன் பின் சில நிமிடங்களில் அதே மெஷினில் அவர் கொடுத்த நம்பருக்கு பரிசு விழுந்துள்ளதாகவும், பரிசுத் தொகை பெறுவதற்கு லாட்டரி ஆப்ரேட்டர் Camelot-ஐ தொடர்பு கொள்ளும் படி தகவல் வந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த அந்த இளைஞன் உடனடியாக குப்பைத் தொட்டியில் போடப்பட்ட லாட்டரி டிக்கெட்டை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக் கொண்ட அவர், வீட்டில் சென்று மீண்டும் இரண்டு முறை லாட்டரி எண்ணை சரிபார்த்துள்ளார். அப்போது £57.9 மில்லியன் பரிசுத் தொகை வென்றதை உறுதி செய்துள்ளார்.
இதனால் உடனடியாக தன்னுடைய பரிசுத்தொகையை பெறுவதற்காக அவர் சென்ற போது, லாட்டரி டிக்கெட் இரண்டாக கிழிந்துள்ளது. நாங்கள் இது உங்களுடைய டிக்கெட் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதற்காக அங்கிருக்கும் சிசிடிவி கமெராவை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்ட பின்னரே அவருக்கு £57.9 மில்லியன்( இலங்கை மதிப்பு 12,03,92,83,007 கோடி) தரப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Fred Higgins ஆடி கம்பெனியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் எனவும் இவரது மனைவி Lesley Higgins அங்கிருக்கும் Montrose Port Authority-யில் மேலாளராக வேலை பார்த்து வந்தாகவும், தற்போது பரிசுத் தொகை விழுந்தவுடன், மனைவி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இருவரும் சைனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த டிக்கெட்டை கிழித்தெறிந்த இளைஞன் Sean Grant கூறுகையில், இனிமேல் நான் யாருடைய டிக்கெட்டையும் கிழித்தெறியமாட்டேன், இது என்னுடைய தவறு தான் என்று கூறியுள்ளார்.