Loading...
பிரபல நடிகையும், பாடகியுமான மஞ்சுஷா மோகந்தாஸ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல பாடகியாக திகழ்ந்த மஞ்சுஷா மோகந்தாஸ் (26) சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது தோழியுடன் மஞ்சுஷா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த லாரி அவர்கள் வாகனம் மீது மோதியது.
Loading...
இதில் பலத்த காயமடைந்த மஞ்சுஷா மற்றும் அவர் தோழி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மஞ்சுஷா நேற்று உயிரிழந்தார்.
உயிரிழந்த மஞ்சுஷாவுக்கு பிரியதர்ஷன் என்ற கணவரும், மகளும் உள்ளனர்.
Loading...