முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
ரவிராஜ் படுகொலை வழக்கை விசாரித்த, கொழும்பு மேல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஆறு எதிரிகளையும் விடுதலை செய்திருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ரவிராஜின், மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இதனைத் தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்திருப்பதுடன், வழக்கை, டிசெம்பர் 4ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்த வழக்கை, நீதியரசர்கள் தீபாலி விஜேசுந்தர மற்றும், அசல வேங்கப்புலி ஆகியோர் விசாரணைக்கு எடுத்திருந்தனர்