வீட்டில் இருந்தே சுவையான சிக்கன் ஷவர்மா செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்..
எலும்பு நீக்கப்பட்ட 1 கப் கோழி இறைச்சி
2 தேக்கரண்டி தாவர எண்ணெய்
1 தேக்கரண்டி மசாலா ஏலக்காய்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி வெட்டப்பட்டது கொத்தமல்லி
2 தக்காளி
2 கப் துண்டாக்கப்பட்ட கீரை இலை
2 தேக்கரண்டி மசாலா
1 தேக்கரண்டி வினிகர்
தேவையான அளவு உப்பு
1 தேக்கரண்டி மிளகு
1/4 கப் நறுக்கப்பட்ட பூண்டு
2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
1 கப் யோகட்
2 வெட்டப்பட்ட வெங்காயம்
பி ரொட்டி
1 வெட்டப்பட்ட கரட்
செய் முறை…
இஞ்சி மற்றும் பூண்டை நீர் ஊற்றி அறைத்த கொள்ள வேண்டும். பேஸ்ட் போன்று அதனை அறைத்து கொள்ள வேண்டும். பெரிய பாத்திரம் ஒன்றில் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுடன் மஞ்சளை சேர்த்து கொள்ளவும். பின்னர் கோழி இறைச்சி துண்டுகளில் இந்த பேஸ்ட்டை தடவி சில மணி நேரங்களுக்கு அல்லது ஒரு இரவு முழுவதும் வைக்கவும்.
கிண்ணம் ஒன்றில் யோகட், எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய், கொத்தமல்லி மற்றும் மிளகு உப்பு சேர்த்து கோழி மீது தடவவும். அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
இப்போது, 175-டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடுப்பில் வைத்து, 40 நிமிடங்களுக்கு இறைச்சியை வேக வைக்கவும்.
40 நிமிடங்களுக்கு பிறகு கோழி பொன்னிறமாக மாறும் வரை கோழியை பொறிக்க வேண்டும்.
இறைச்சி சமைத்தவுடன், அதை ஒரு தட்டில் மாற்றவும், துண்டுகளாக வெட்டவும். பின்னர் ரொட்டியை எடுத்து வெட்டிய கோழி, கரட், கீரை இலைகள், வெங்காயம் மற்றும் தக்காளி வைக்கவும். பின்னர் சாஸ் ஊற்றி பரமாறவும்.