காணாமல் போனதாக கூறப்பட்ட 150 கரும்புலி உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வேடான் நகரில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த கரும்புலி உறுப்பினர்கள் தங்கியிருக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் முகவர் நிறுவனத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னரே இந்த நபர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கரும்புலி உறுப்பினர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த போது, படகின் என்ஜின் செயலிழந்த காரணத்தினால் இந்தோனேசியாவில் சரணாகதி அடைந்துள்ளனர்.
பிரிட்டனின் தமிழ் ஏதிலிகள் பேரவை என்ற அமைப்பு இந்த கரும்புலிகளுக்கு உதவி வருவதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட கரும்புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களோ அல்லது வேறும் சாட்சியங்களையோ குறித்த சிங்கள ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.