கனடாவில் வாழும் இலங்கை குடும்பத்தினர் பயணித்த வாகனம் ஒன்று ஹிமில்டன் பகுதியில் பகுதியில் தீப் பற்றி எரிந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த அனர்த்த சம்பவம் தொடர்பில் கனேடிய ஊடகங்கள் மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளன.
விபத்து ஏற்பட்ட சமயத்தில் கணவன், மனைவி மற்றும் அவரது 6 மாத குழந்தை எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினார்கள்.
வாகனத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட புகையை தொடர்ந்து வாகனம் தீப்பற்றியுள்ளது. குறித்த மூவரும் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பல அடி தூரம் ஓடியுள்ளனர்.
வெறும் 4 நிமிடங்களில் வாகனம் முழுமையாக தீப்பற்றி முழுமையாக எரிந்துள்ளது. இந்த வாகனத்தின் பெறுமதி இலங்கை பணத்தில் 3 கோடி ரூபாய் பெறுமதியானதென தெரியவந்துள்ளது.
இந்த வாகனம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இலங்கை தம்பதி தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதிக பெறுமதியிலான SUV வாகனத்தை நாங்கள் பாதுகாப்பு குறித்து கருதியே வாங்கினோம். எனினும் அதன் பாதுகாப்பு தன்மை இப்படி இருக்கும் என நம்பவில்லை. எங்களின் தவறு இல்லை என்பதனால் காப்புறுதியும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் இந்த நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த தம்பதிக்கு புதிய வாகனம் ஒன்றை வழங்குவதற்கு SUV நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மோட்டார் வாகன நிறுவனத்தின் செயற்பாடு குறித்து காரினை பறி கொடுத்த இலங்கை தம்பதியர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.