ஈஸ்ட்டை பயன்படுத்தி நீளமான கூந்தலை பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளதென்பது பலருக்கு தெரியாது. எப்படி என அறிந்து கொள்வோம்..
ஈஸ்டில் உள்ள நன்மைகள்?
ஈஸ்டில் அதிகம் போலிக் அமிலம் உள்ளது.
முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்
வேர்க்கால்கள் பலப்படுத்தப்படும்
முடிஉதிர்வினை கட்டுப்படுத்த முடியும்.
சரும மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்ல பலன்களை தரும்
தேவையானவை:
முட்டையின் மஞ்சள் கரு – 2
ஈஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தேன், ஈஸ்ட் போன்ற்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
தலைமுடியை ஈரப்படுத்துங்கள்.
இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும்.
20 -30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும்
வாரம் இரண்டு நாட்கள் இவ்வாறு செய்து பாருங்கள்.
முறை 2
தேவையான பொருட்கள்
ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
கற்றாழை – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து கொள்ளவும்.
க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.
இதனை தலையில் தடவவும்
அரை மணி நேரம் கழித்து தலைமுடியில் அலச வேண்டும்
வாரம் ஒருமுறை செய்தால் நல்ல நீளமான கூந்தலை பெறலாம்.