இலங்கை குடியுரிமையை இழந்து இரட்டை குடியுரிமை வழங்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக விசேட விசா ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவு பிரதானி சந்தன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஜப்பான் உட்பட பல நாடுகள் இரட்டை குடியுரிமை வழங்காத நிலையில் அவ்வாறான நாடுகளில் குடியுரிமை பெற்று கொண்டு இலங்கை குடியுரிமையை இழந்தவர்களுக்கு இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட திறமை மற்றும் முதலீடு திறன் உள்ள இலங்கையர்களினால் இலங்கையில் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு உதவி பெற்று கொள்ளும் நோக்கில் இந்த விசா வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நீண்ட காலமாக இலங்கையில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கும் விசேட விசா முறையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசா முறையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு 3 மாதங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.