05.08.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 20ம் திகதி, துல்ஹாதா 22ம் திகதி, 5.8.18 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 7:08 வரை; அதன் பின் நவமி திதி நாளை அதிகாலை 4:45 வரை; பரணி நட்சத்திரம் காலை 11:33 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : ஆடிக் கார்த்திகை விரதம், முருகன், சூரியன் வழிபாடு, கரிநாள்
மேஷம்:
உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகும். மிதமான பணவரவு கிடைக்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் செலவாகும்.எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம்
ரிஷபம்:
இளமைக்கால நண்பரை சந்திப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். குடும்பத்துடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்:
எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் முன்யோசனை அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும் .பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் .தாயின் அன்பு ஆசி மனதில் நம்பிக்கை தரும்.
கடகம்:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறி பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை வந்து சேரும்.
சிம்மம்:
நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள்.நிலுவைப் பணம் கிடைக்கும்.வாகனப் பயணம் இனிதாக அமையும். பிள்ளைகளின் செயல் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும்
கன்னி:
தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம். உங்களின் நற்குணம் மாறாமல் செயல்படுவீர்கள் .தொழில் வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணச்செலவில் சிக்கனம் தேவை. வளர்ப்பு பிராணிகளிடம் விலகுவது நல்லது.
துலாம்:
உங்களை சிலர் குறை சொல்ல நேரிடலாம். சகிப்புத் தன்மையுடன் பொறுமை காப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவை. பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.
விருச்சிகம்:
நண்பர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்
தனுசு:
இஷ்ட தெய்வ அருளால் முக்கியமான செயல் நிறைவேறும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்
மகரம்:
உங்கள் செயல்களில் நிதானம் பின்பற்றவும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவர்களிடம் சண்டை, சச்சரவு வேண்டாம்.முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள்.
கும்பம்:
உடல்நலத்தில் அக்கறை வேண்டும். திட்டமிட்ட செயல் நிறைவேறுவதில் தாமதம் இருக்கும்.தொழில், வியாபாரம் சீர்பெற நண்பரால் உதவி உண்டு.பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்
மீனம்:
வெளிவட்டார பழக்கத்தால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். சேமிக்கும் விதத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள்.