ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பல பகுதியிலும் போலிசார் என கூறி தமிழ் ,முஸ்லிம் மக்களின் கடைகளில் தங்க ஆபரணங்களை திருடியதை Cctv கமரா வீடியோ மூலம் பெண்ணிண் போட்டோ பயன்படுத்தி குறித்த குற்றவாளியான சிங்கள பெண்ணை பொதுமக்கள் அடையாளம் காட்டியதை தொடர்ந்து இன்று ஏறாவூர் போலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
மாத்தளையை சேர்ந்தவள்தான் என்ற தகவல் நேற்றைய தினம் எமது எல்லாளன் விழிப்புணர்வு குழுவுக்கு கிடைக்கப்பெற்றதும்,உடனடியாக போலிசாருக்கு தெரியப்படுத்தினோம்.
இன்று காலை ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸ் பொருப்பதிகாரி தலைமையிலான பொலிஸ்குழுவினர் மாத்தளைக்கு சென்று, மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அவளை கைது செய்தபோது, நகையை கதுறுவலயில் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாத்தளையிலிருந்து ஏறாவூர் நோக்கி வரும் வழியிலேயே களவாடப்பட்ட மாலை விற்கப்பட்ட கடைக்கு சென்று, மாலையை கைப்பற்றிய பொலிசார், கடை உரிமையாளரையும் அழைத்து வந்துள்ளனர்.