அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் நாக விகாரையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருடைய பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்களில் இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படும் 334 பட்டதாரிகளில் பௌத்த பிக்கு ஒருவரும் தெரிவாகி உள்ளார்.
அந்தப் பெயர்ப் பட்டியலில் யாழ்ப்பாணம் நாக விகாரையைச் சேர்ந்த வண. கொங்கல சிறி தர்ம தேரர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 331 ஆவது பெயராக அவரது பெயர் உள்ளது. இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள் என பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது.