பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்துடன் இணைந்து ஜேர்மனியும் புதிய எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக ஜேர்மனி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரிக்கும் ஜூலைக்கும் இடையில் சுமார் 21,000 புலம்பெயர்வோர் மத்திய தரைக்கடலைத் தாண்டி ஸ்பெயினின் கரையை வந்தடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயின் கடலோரக் காவல் படையினர் ஒன்பது படகுகளிலிருந்து 395 பேரை மீட்டனர்.
கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 8,150 பேர் ஆப்பிரிக்காவை விட்டு ஸ்பெயின் கடற்கரையை வந்தடைந்துள்ளனர், அதாவது சராசரியாக நாளொன்றிற்கு 54 பேர். மே மாதம் 31ஆம் திகதிக்குப்பின் 12,842 பேர், சராசரியாக நாளொன்றிற்கு 230 பேர் ஸ்பெயினை வந்தடைந்துள்ளனர்.
இந்த விடயங்களை எல்லாம் ஜேர்மனி நன்கு கவனித்து வருவதால், ஸ்பெயினுக்கு ஏற்பட்ட அதே நிலை ஜேர்மனிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஜேர்மன் அதிகாரிகள் எல்லையில் பலத்த கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாக ஜேர்மனியின் உள்துறை அமைச்சகத்தின் புலம்பெயர்தலுக்கான அமைச்சர்களில் ஒருவரான Helmut Teichmann தெரிவித்துள்ளார்.
2016இல் பால்கன் பாதை அடைக்கப்பட்டபின் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாக இத்தாலி மாறிவிட்டது.
புலம்பெயர்வோர் பிரான்ஸ், Benelux நாடுகள் மற்றும் ஜேர்மனிக்குள் திரும்பலாம் என்று அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் புதிதாக வந்து குவிந்துள்ள புலம்பெயர்ந்தோரைக் கையாள ஸ்பெயினுக்கு உதவ ஜேர்மன் அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் Helmut Teichmann தெரிவித்துள்ளார்.